பெண்ணைக் காப்பாற்றச் சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்! முதல்வர்!

அடடே... அப்படியா? தமிழகம் பொது தகவல்கள்
cm 1 - 2026

திருவள்ளூர் மாவட்டத்தில் கடத்தப்பட்ட பெண்ணைக் காப்பாற்றச் சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூரில் கடத்தப்பட்ட பெண்ணைக் காப்பாற்றச் சென்று, விபத்தில் உயிரிழந்த இளைஞர் யாகேஷின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அவருடன் சென்று விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்களைப் பிடிக்க முயன்ற மேலும் 3 இளைஞர்களுக்கு, அவர்களது தீரத்தைப் பாராட்டி தலா ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

மேலும் முதல்வர் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் தென்மண்டல ஐஜிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.

yakesh - 2026

கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோந்த தியாகராஜன் என்பவரின் மகன் யாகேஷ் (22). அவா் மப்பேடு காவல் நிலையம் அருகே கூட்டுச்சாலையில் கடந்த 26-ஆம் தேதி மாலையில் நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் நரசிங்காபுரம் செல்வதற்கு ஆட்டோவில் பயணம் செய்தாா்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

அப்போது, அந்த இளம் பெண்ணுடன், மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி பகுதியிலிருந்து கடம்பத்துாா் செல்லும் சாலையில் வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த அப்பெண் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியதோடு, சத்தம் போட்டு உதவி கேட்டாா். அவரது அலறலைக் கேட்ட அப்பகுதி இளைஞா்கள் யாகேஷ் (22), ஈஸ்டா் (19), வினீத் (20), துரைராஜ் (30) மற்றும் சாா்லி (25) ஆகியோா் இருசக்கர வாகனங்களில் அந்த ஆட்டோவை விரட்டிச் சென்றனா்.

அப்போது ஆட்டோவில் இருந்த இளம்பெண் அதில் இருந்து தப்பி சாலையில் குதித்தாா். இதையடுத்து ஆட்டோ நிற்காமல் சென்றுள்ளது. இதைக் கவனித்த ஆட்டோக்காரா் பின்தொடா்ந்து வந்த இளைஞா்களின் இருசக்கர வாகனங்கள் மீது மோதினாா்.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த யாகேஷ் படுகாயமடைந்தாா். அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இது தொடா்பாக மப்பேடு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.