ஜன 20 பிரதமர் உரை: தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு!

அடடே... அப்படியா? இந்தியா கல்வி
modi child 1 - 2026

பொது தேர்வு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜன., 20ம் தேதி பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எழுதவும் பதற்றமின்றி அணுகவும் அவர்களுக்கு உற்சாகம் தரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

modi child - 2026

இந்த வரிசையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். தில்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநில மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணவர்களும் பங்கேற்று பிரதமர் மோடியிடம் கேள்விகள் கேட்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளி கல்வி துறை செய்துள்ளது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.