வாக்காளர் அட்டையை திருத்த சொன்னா மனுஷனையே நாயா மாத்திட்டாங்களே.. அதிர்ச்சியில் முதியவர்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
election id - 2026

மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாகர்(64). இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து திருத்தம் செய்து அவருக்கு அளிக்கப்பட்ட புதிய அட்டையில் கர்மாகர் புகைபடத்துக்கு பதிலாக நாயின் படம் இருந்துள்ளது.

election id wrong - 2026

இதை பாராது அதிர்ச்சியடைந்த கர்மாகர், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தார். இதையடுத்து அந்த அடையாள அட்டையை வாங்கிக் கொண்ட அதிகாரிகள், நாய் படத்தை நீக்கி, வேறு அட்டையை அளித்தனர்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் திருத்தம் செய்தபோது இந்த தவறு நேரிட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.