திருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு! ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
caasupport - 2026

உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் திருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வாசகங்களை அச்சிட்டு அளித்து வருகின்றனர் இளைஞர்கள்.

ம.பி.,யில் இளைஞர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு(I support CAA)’ என அச்சிட்டிருந்தார். இந்த பத்திரிகை இப்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் தூண்டுதலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், திமுக., திரிணமுல் என எதிர்க்கட்சிகள் மாணவர்களை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பத்திரிகைகளில் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி வருகின்றன.

இதனால் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் ம.பி., இளைஞர் ஒருவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே வித்தியாசமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

CAA support ani - 2026

ம.பி., மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தை சேர்ந்தபிரபாத்துக்கு ஜன 18 இன்று திருமணம். பிரபாத் தனது திருமண அழைப்பிதழில், ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு’ என அச்சிட்டு அனைவருக்கு வழங்கி இருந்தார்.
இது குறித்து அவர் கூறியபோது… மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பிரபாத்தின் இந்த வித்தியாச முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதே போல் இரு தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் சம்பால் பகுதியைச் சேர்ந்த மோஹித் மிஸ்ரா, சோனம் பதக் ஆகியோரின் திருமண அழைப்பிதழும் இப்போது வைரலாகி வருகிறது. இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.