சமூக அக்கறை நிறைஞ்சது இந்த குரங்கு! அப்படி என்ன செய்கிறது வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உங்களோடு ஒரு வார்த்தை உரத்த சிந்தனை பொது தகவல்கள்
monkey - 2026

கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் வெயில் கொளுத்தோ கொளுத்தென்று கொளுத்துகிறது எல்லா பக்கங்களிலும் தண்ணீர் பிரச்சனை ஆரம்பம் ஆகிவிடும் இந்நிலையில் அடைக்கப்படாத குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை குரங்கு ஓன்று தனது கைகளால் அடைக்க முயற்சிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

9 வினாடிகள் ஓடும் இந்த வீடீயோவை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அடைக்கப்படாமல் இருக்கும் குழாய் ஒன்றில் இருந்து வெளியேறும் தண்ணீரை, அங்கிருக்கும் குரங்கு ஓன்று அங்கு கிடக்கும் இலைகளை கொண்டும், தனது கைகளை கொண்டும் அடைக்க முயற்சிக்கிறது.

கோடைகாலம் நெருங்கிவரும் நிலையில், தண்ணீரின் அருமை குறித்து விளக்கும் விதமாக இந்த வீடியோ காட்சி அமைந்திருப்பதாக பலரும் தங்கள் கருத்தை தெரிவித்துவருகிற்றனர். சில மனிதர்கள் கண்டாலும் காணாதது போல சென்று விடும் இக்காலத்தில் குரங்கின் இச்செயல் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.