ட்ரோன் மூலம் போதைப் பாக்கு வாங்கிய இளைஞர் கைது!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்
dron 1 - 2026

ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்பி போதை பாக்கு வாங்கிய இளைஞரை போலிஸார் கைது செய்தனர்

ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்பி நண்பரின் கடையில் போதைப்பாக்கு வரவழைத்த ஒரு இளைஞரையும் அவருடைய நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள மோர்பி என்ற நகரை சேர்ந்தவர் ரவி பதான்யா வயது 26 போதைக்கு அடிமையான இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் ஊரடங்கு அமலில் இருப்பதால் மது மற்றும் புகையிலையை விற்கும் கடைகள் அனைத்தும் மூடியே இருக்கின்றன
ரவியின் நண்பன் கிரண் கர்காரியா வெற்றிலை பாக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்

இவரின் கடைக்கும் ரவியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு 100 மீட்டர் தொலைவு இருக்கும் சிகரெட் புகையிலை பீடி போன்றவற்றை விற்பனை செய்துவரும் அவர் ஊரடங்கு காரணமாக கடையை திறக்க வில்லை

ரவிக்கு போதைப்பாக்கு தேவைப்பட்டது இதை தன் நண்பருக்கு தெரிவித்தாராம் தன்னிடமிருக்கும் ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்புவதாகவும் அதன் மூலம் பாக்கை தனக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார் அவரும் சம்மதம் தெரிவித்தார்

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

அதன்படி தனது அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்தபடியே அந்த விமானத்தை இயக்கினார் அது பறந்து சென்று அவருடைய நண்பரின் கடை அருகே சென்றது திட்டமிட்டபடி ஒரு சிறிய பையில் போதை பாக்கு எடுத்து அதை விமானத்தில் கட்டிவிட்டார்.

அந்த குட்டி விமானம் அதை சுமந்து கொண்டு ரவியின் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தது இத்துடன் இவர்கள் இந்த விளையாட்டை நிறுத்தி இருந்திருந்தால் பிரச்சனை எதுவும் இருந்திருக்காது இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர் அது வைரலானது

இதை அறிந்த காவல்துறையினர் ஊரடங்கை மீறி தடை செய்யப்பட்ட போதை பாக்கை பரிமாறிய குற்றத்திற்காக ரவி பதானியா கிரண் கர்காரியா ஆகிய இரு நண்பர்களையும் கைது செய்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.