madurai highcourt branch
madurai highcourt branch

சவுடு, வண்டல், களிமண் அள்ள நீதிமன்ற தடை நிலுவையில் இருக்கும்போது பொது பணித் துறை மண் அள்ள அனுமதி வழங்கியது குறித்து தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளைகேள்வி?

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களை தவிர 13 மாவட்டங்களில் சவுடு மண், வண்டல் மண் அள்ள உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 6.5.2020 அன்று செய்தி வெளியீடு எண் 316 ன் படி அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று வண்டல் மண், சவுடு மண், களிமண் அள்ளுவதற்கு பொது பணி துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு நிலுவையில் இருக்கும் போது எப்படி இது போன்ற செய்திளியிடலாம் என்றும், இதனால் மணல் திருட்டில் ஈடுபட அதிகம் வாய்ப்புகள் இருப்பதால் தடுக்கும் படியும், விவசாயிகளின் வாழ்வாதாரமான குடிநீர் பிரச்சினையை தடுக்குமாறு மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த விவசாயி காளிதாஸ் என்பவர்மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ALSO READ:  திமாகி நக்சல்கள் – யார் என்று சொல்லவும் வேண்டுமோ?

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் P.N.பிரகாஷ், புகழேந்தி அடங்கிய குழுவினர், தமிழக அரசுக்கு மூன்று கேள்விகள் கேட்டுள்ளனர்.

  1. இடைக்கால தடை உத்தரவு நிலுவையில் இருக்கும் போது எதனடிப்படையில் செய்தி வெளியிடபட்டுள்ளது?
  2. இந்த செய்தி வெளியீட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது தெரியாதா?.
  3. சவுடு மண் தவிர வண்டல், களிமண் பயன்படுத்தும் பதிவு செய்த மண் பாண்ட தொழிலாளர்கள் தமிழகத்தில் எத்தனை பேர் உள்ளனர்?

இதற்கு உரிய விளக்கம் கேட்டு வரும் புதன்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending