ஊழியம் செய்ய பணமில்லையாம்! பைக் திருடராக மாறிய பாதிரியார்!

Published:

samuel madurai pastor
samuel madurai pastor

பைக் திருட்டில் ஈடுபட்ட பாதிரியாரை மடக்கிபிடித்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 11 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை தனக்கன்குளம் அருகேயுள்ள பர்மாகாலனி பகுதியை சேர்ந்த விஜயன் (எ) சாமுவல் இவர் அதே பகுதியில் கிறிஸ்துவ பிரதர்ஸ் அசெம்ப்ளி என்ற அமைப்பை நடத்தி மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாத நிலையில் வெளியில் சுற்றித் திரிந்த பாதிரியார், வீடுகளில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திருடிய பைக் ஒன்றை மெக்கானிக் கடையில் கொடுத்த போது பைக் விவரங்கள் குறித்து முரண்பாடாக பதில் அளித்த நிலையில் மெக்கானிக் தரப்பில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை செய்த சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் பிரியா, துணை ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர்கள் கணேசன் மற்றும் பொத்தி ராஜா தலைமையிலான காவலர் ரமேஸ் மற்றும் அன்பு என்கின்ற காவலர்கள் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
samuel madurai pastor
samuel madurai pastor

இந்நிலையில் தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து 11 பைக்குகளை சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

போலீசார் இதுகுறித்து கூறியபோது… தேனி மாவட்டம் கம்பத்தில் பாதிரியாரான படிப்பை முடித்த சாமுவேல் தனக்கன்குளத்தில் ஊழியம் செய்து வந்தார் இதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி திடீரென நிறுத்தப்பட்டது 

samuel madurai pastor
samuel madurai pastor

இதனால் டூவீலர்களில் திருடி தலா ரூபாய் 10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்து வந்துள்ளார் சில நாள்களுக்கு முன் டூவீலர் ஒன்றை பைபாஸ் ரோடு மெக்கானிக்கிடம் சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார். அப்போது சாமுவலின் அலைபேசி எண் ஆதார் அட்டை நகலை மெக்கானிக் வாங்கிக்கொண்டார் டூவீலரில் இருந்த ஆவணங்களை மெக்கானிக் சரிபார்த்த போது அது வேறு ஒரு வருகிறது என்று தெரிய வந்தது 

அதில் இருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார் மெக்கானிக். உடனே டூவீலர் உரிமையாளர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சாமுவேல் கைது செய்யப்பட்டார் என்றனர்.

கொரோனா ஊரடங்கால் பாதிரியார் பைக் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

Related articles

Recent articles

spot_img