ஸ்டெர்லைட்ட மூடணும்னு 13 பேர சாவடிச்சு… இப்போ தொறக்கணும்னு மனு! இதுதான் திமுக.,!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை
sterlite-letter-horz
sterlite-letter-horz

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கேன்ஸரை பரப்புவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு பரப்பி ஆலையை மூட வைத்தது ஒரு திருட்டு கும்பல்.

13 உயிர்களும் பலியானது தான் சோகம். அதற்கு முழுவதும் பின்னணியில் இருந்தது யார் என்பது ஊருக்கே தெரியும்.தேர்தல் முடிந்து வெற்றியும் பெற்றாகி விட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் போது தற்போது ஆலையை மீண்டும் திறக்க சொல்லி முதல்வருக்கு மனுவாம். மனுவை அளித்திருப்பவர் திமுக ஊராட்சி ஒன்றிய தலைவர் அன்புராஜ் என்னும் இவர் தான்.

anburaj-dmk
anburaj-dmk

அவங்களே பாம் வைச்சு அவங்களே எடுப்பாங்களாம். ஆலையை மூடியதால் கிராம மக்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்களாம்.

மேலும் சில சமூக விரோதிகளின் தூண்டுதல் பேரில் போராட்டத்தில் கலந்து கொண்டார்களாம். தற்போது வாழ்வாதாரமே பாதிகப்பட்டுள்ளதாம்.

இதைத்தாண்டா ரஜினி அன்றே சொன்னார்.

முதலிலேயே உணர்ந்து செயலாற்றாமல் போன எடப்பாடி அரசின் மிகப் பெரிய தோல்வி இது. மேலும், இந்த நிலமையில் அதுவும் கொரோனாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் தொடங்க உடனே எவரும் முன் வரப்போவதில்லை.

குறிப்பாக ஸ்டெர்லைட் சம்பவத்திற்கு பிறகு பல தொழிலதிபர்கள் ஆந்திரா பெட்டர் என்று எப்போதோ எண்ண துவங்கி விட்டனர். ஜெகன் ரெட்டி இதை சரியாக புரிந்து கொண்டு அதற்கான முயற்சிகளையும் எடுக்கிறார்.

இனி, இளைஞர்கள் சீமான் ஆமைக்கறி கதைகளை கை தட்டி ரசித்து மகிழலாம். மற்றவர்கள் சீனி சக்கர சித்தப்பா.. ஏட்டில எழுதி நக்கப்பா என்று பழமொழி சொல்லி குதூகலிக்கலாம்.

  • பகிர்வு: நெல்லை சுரேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.