ஒற்றை ஆளாக கொள்ளையனை ஓட ஓட விரட்டி நகைகளைக் காத்த வீரப் பெண்மணி!

Published:

theif1

கர்நாடகாவில் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளைக் காட்டி அங்கிருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் துணிச்சலாக அவரை ஓட ஓட விரட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பச் செட்டி என்பவர் கர்நாடகாவின் சிக்மங்களூரு மாவட்டம் சிறுங்கரியைச் சேர்ந்தவர். இவருக்கு சொந்தமான நகைக் கடைக்குள் மர்ம நபர் ஒருவர் முக கவசம் அணிந்த நிலையில் நுழைந்து அங்கிருந்த நகைகளை கொள்ளையடிப்பதற்காக, பெண் ஊழியர்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.

thief

அப்போது அங்கிருந்த பெண் ஊழியர்கள் பயந்து வெளியே ஓட, ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டும் நாற்காலியை தூக்கி அந்த கொள்ளையனின் மீது ஓங்கி அடித்தார்.

இந்த அடியால் நிலைகுலைந்து போன திருடன், தலைதெறிக்க ஓடியுள்ளான். ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் தப்பி ஓடிய அந்தக் கொள்ளையனை இப்போது போலீஸார் தேடி வருகின்றனர். அதேநேரம் அந்தப் பெண் ஊழியரின் தைரியத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img