நாப்கினுக்கு முழு வரிவிலக்கு! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி குறைக்கப்பட்ட பொருள்கள்!

இந்தியா சற்றுமுன் வணிகம்

GST Council Meeting - 2026

இன்று நடைபெற்ற 28ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன. அதன்படி,  டிவி, ஏசி, வாஷிங் மெஷினுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. சானிடரி நாப்கின், செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றுக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று 28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

28 %ல் இருந்து 18% -க்கு!

இதன்படி  டிவி, வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ், வீடியோ கேம்ஸ், வேக்யூம் கிளினர்ஸ், ஜூசர் மிக்சர், வாட்டர் கூலர், வாட்டர் ஹீட்டர், லித்தியம் அயன் பேட்டரி ,பெயின்ட் மற்றும் தோல் பொருட்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

18%ல் இருந்து 12%க்கு…

மூங்கில், கைவினைப் பொருட்கள், கைப்பை, நகைப்பெட்டி ஆகியவற்றுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

12%ல் இருந்து 5% க்கு…

எத்தனால் ஆயில், இறக்குமதி செய்யப்பட்ட யூரியா, 1000 ரூபாய் வரையிலான விலை கொண்ட காலணிகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முழு வரி விலக்கு!

சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்பிள், கல் மற்றும் மர சிலைகள், செறிவூட்டிய பால், ராக்கி கயிறுகள் ஆகியவற்றுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.