விநாயகர் சதுர்த்தி விழா நடந்தே தீரும்!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
gopalji
gopalji

விநாயகர் சதுர்த்தி விழா நடந்தே தீரும் …விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார் இராம கோபாலன்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் பொது முடக்கத்தை அறிவித்து அதிக கெடுபிடிகளைக் காட்டி வருகிறது தமிழக அரசு. 

அதே நேரம்,  இந்துக்களின் ஆலயங்களை நோய்த் தொற்று பரவும் காரணம் கூறி பூட்டி வைத்துள்ள தமிழக அரசு, அதிக நோய் பரப்பும் இடமாக உள்ள டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து வழக்கம் போல் வியாபாரம் செய்து வருகிறது என்று தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக, தற்போது வீதிகளில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் தடை போட்டுள்ளது தமிழக அரசு. 

கொரோனா நோய் பரவல் காரணமாக சதுர்த்தி விழா தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது 

ஆனால் சிறிய அளவிலாவது ஒவ்வோர் இடத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கண்டிப்பாக நடத்தியே தீர்வது என்று இந்த விழாவை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடத்திக்கொண்டு வரும் இந்து முன்னணி அமைப்பு உறுதிபட தெரிவித்துள்ளது 

விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு கண்டிப்பாக நடந்தே தீரும் என்ன விளைவுகள் வந்தாலும் நம்பிக்கை இருக்கிறது இந்துக்கள் தயாராகவே இருக்கிறார்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை எந்த காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.