கொரோனா: 105 வயது முதியவர் குணம்! கேரளாவில் குணமாகும் முதியோர்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
old man 1

கேரளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 103 வயது முதியவர் தொற்றிலிருந்து குணமடைந்தார். அவரை மருத்துவர்கள் உற்சாகப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்த 103 வயது முதியவரான பரீத் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதனிடையே 20 நாட்களுக்கு பிறகு நேற்று (செவ்வாய்க் கிழமை) அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அவரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இருபுறமும் நின்று கைகளை தட்டி உற்சாகப்படுத்தி பூக்களை வழங்கி வழியனுப்பிவைத்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவது பெருமையாக உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதற்கு கொல்லம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 105 வயது முதியவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தார். மேலும், கோட்டயம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 93 மற்றும் 88 வயது தம்பதி கொரோனாவிலிருந்து குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.