உடற்பயிற்சியில் இருந்த நடிகையிடம் தகராறில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி!

Published:

samuktha

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர், ஆக்ரா ஏரி அருகில் உள்ள பூங்கா ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகி கவிதா ரெட்டி, அவரை தாக்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட லைவ் வீடியோ மூலம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, காங்கிரஸ் நிர்வாகி கவிதா ரெட்டி என்பவர், என்னை தாக்கியதாக தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் என்னை சூழ்ந்துகொண்டதாகவும், போதைப்பொருள் சம்பவத்துடன் என்னையும் சம்பந்தப்படுத்தி சத்தமிட்டு பேசியதாகவும், என்னுடைய உடைகளையும் சம்பந்தப்படுத்தி பேசினார்கள் என தெரிவித்தார்.

samuktha-hegde

இந்த தகவல், பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து அவர் போலீசாரிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

Related articles

Recent articles

spot_img