அக்.11 இன்று… தமிழகத்தில் 5015 பேருக்கு கொரோனா உறுதி! 65 பேர் மரணம்!

Published:

corona-image
corona-image

தமிழகத்தில் இன்று 5015 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரே நாளில் 65 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் .. என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,56,385 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,250  பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,82,014 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 65 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,252 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.  இதுவரை கொரோனாவில் இருந்து விடுபட்டு, 5,02,038 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

 மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

district-wise-corona-details-oct-11
district-wise-corona-details-oct-11

Related articles

Recent articles

spot_img