புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி! ஐடிசி நிறுவனத்தில் புதிய பிரிவு தொடக்கம்!

Published:

edappadi-in-pudukkottai
edappadi-in-pudukkottai

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஐடிசி நிறுவனத்தின் ஐடிசி ஒருங்கிணைந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் லாஜிஸ்டிக் வசதிகளை தொடங்கி வைத்து, தயாரிப்பு பொருட்களை பார்வையிட்டார்.

உடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஜி.சம்பத், ஆர்.காமராஜ் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று  புதுக்கோட்டை வந்துள்ளார். 

காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த அவர், விராலிமலை வந்து, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.  பின்னர், ஜல்லிக்கட்டு சிலையைத் திறந்து வைத்தார். 

தொடர்ந்து புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாயில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை பார்வையிடும் முதலமைச்சருக்கு, காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக விவசாயிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.

  • தனபால், புதுக்கோட்டை

Related articles

Recent articles

spot_img