புதுகைக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி!

அடடே... அப்படியா? சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
edappadi-in-pudukkottai1
edappadi-in-pudukkottai1

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

அப்போது பேசுகையில் தமிழகத்திலேயே ஜல்லிக்கட்டு அதிகமாக நடைபெறும் இடம் புதுக்கோட்டை தான். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 110 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்துள்ளது என பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, ஒன்றிய சேர்மன் வீ.ராமசாமி
ஆகியோர் பங்கேற்றனர்.

edappadi-opens-jallikattu-kaalai-statue
edappadi-opens-jallikattu-kaalai-statue

பின்னர், புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பங்கேற்று பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்டபணிகளை திறந்தும் வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாநில வீட்டுவசதிவாரிய தலைவர் கு.வைரமுத்து,மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை நிகழ்ச்சிகளில் முதல்வர் பேசியவற்றில் சில முக்கியத் துளிகள்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன ஆலை தொடங்கப்பட்டு 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது

அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன
புதுக்கோட்டையில் நோய்ப்பரவல் குறைந்திருக்கிறது

சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன

முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக ஸ்டாலின் அரசைப்பற்றி குறை கூறுகிறார்

விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களுக்கு சுமார் 8 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது

பிரதம மந்திரி குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் 2016 முதல் 9 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன

கூட்டு குடிநீர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது

-21 ஆம் நிதியாண்டில் சுமார் 500 கோடி கடன் வழங்க இலக்கு

தமிழகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

  • செய்தி: தனபால், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.