திருவண்ணாமலையிலும் … கார்த்திகை தீப கிரிவலத்துக்கு தடை!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
thiruvannamalai deepa2 horz
thiruvannamalai deepa2 horz

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபத் திருவிழாவையொட்டி வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப் பட்டுள்ளது…

திருவிழா நடக்கும் 9 நாட்களில், ஒரு நாளுக்கு 5000 பக்தர்கள் என ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப் படுகிறது. தீபத் திருவிழாவுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப் பட்டிருக்கின்றன.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான வருகின்ற 29ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத் திருவிழாவில் கடந்த ஆண்டு 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் கொரோனா பெரும் தொற்று காரணமாக பக்தர்கள் யாருமின்றி திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

26 ஆம் தேதி நடைபெற இருந்த மகா ரதம் என்று அழைக்கக்கூடிய பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டமும் ரத்து செய்யப் பட்டிருக்கிறது. மகா தீபத் திருவிழாவையொட்டி பத்து நாட்கள் திருவிழா கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளரிடம் பேசுகையில் தெரிவித்தார்.

செய்தி: எஸ் ஆர் வி பாலாஜி, திருவண்ணாமலை

Sorry! This product is not available for purchase at this time.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.