பெண் குழந்தைகளின் பாதுகாவலன் யோகி ஆதித்யநாத்!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்
up-yogi
up-yogi

ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படால், இந்த நாடே இப்படித் தான் என்பதும், ஒரு குறிப்பிட்ட சாதி பெண் பாலியல் கொடுமைக்கு ஆளானால் ஒட்டுமொத்த பிற சாதியினரும் அவர்கள் மீது வன்மம் கொண்டு நடத்தியதாகவும், ஹிந்துமதம், ஹிந்துத்துவம் பெண்களுக்கு எதிராக இருப்பதாகவும், போதாக்குறைக்கு மனு ஸ்மிரித்தியை தவறாக மேற்கோள்காட்டி ஹிந்து தர்மத்தை களங்கப்படுத்தியது என தொடர்ந்து இந்த தேசத்திற்கு எதிராகவும், அதன் மாண்பிற்கு எதிராகவும், இந்த தேசத்தின் ஆன்மாவாக இருக்கும் ஹிந்து மதம் மற்றும் ஹிந்துத்துவத்திற்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதை பார்த்து வருகிறோம்.

தாக்குதல் தொடுப்போர் பெரும்பாலும் மிஷனரிகள், இத்தாலி காங்கிரஸ், சீன கம்யூனிஸ்ட், நக்சல் கூட்டங்கள், அர்பன் நக்ஸல் , மிஷனரி ஆதரவு அமைப்புகள், ஜிஹாதி ஆதரவு ஊடகங்கள் என பலரும் பல காலங்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் இந்த வன்கொடுமை பா.ஜ.க ஆளும் மாநிலம் என்றால் அதை வைத்து உலகளவில் இந்தியாவின் மானத்தை வாங்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

ஆனால் கீழே உள்ள செய்தி மனதிற்கு சந்தோசத்தைத் தருவதோடு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு, கல்வி குறித்து எப்படி கவலை கொண்டிருக்கிறார் என்பதோடு, அதையொட்டி எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

உ.பியிலிருந்து காணாமல் போன பெண் குழந்தைகளை தேடுவதற்காக தனிச்சிறப்பு காவல் அமைப்பு உருவாக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பினால் அந்த ஆண்டிலேயே 5 மாதங்களுக்குள் கடத்தப்பட்ட 141 பெண் குழந்தைகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த மாதங்களில் 485 பெண் குழந்தைகள் என 626 குழந்தைகள் மீட்பு நடந்துள்ளது.

சாதாரணமாக பெண் குழந்தைகள் மாயம் என்பதை பெரும்பாலான காவல் நிலையங்கள் பத்தோடு பதினொன்றாகவே வழக்கு பதியப்படுகிறது,. ஆனால் நாங்கள் இந்த தனிச்சிறப்பு அமைப்பின் மூலம் பிரத்யேக கவனம் கொடுத்து காணாமல் போனதாகச் சொல்லப்படும் பெண் குழந்தைகளை மீட்டதோடு அனைத்து குழந்தைகளும் தற்போது அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளனர் என டி ஜி பி ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.

கடத்தப்படும் பெண் குழந்தைகளை மீட்க தனிச்சிறப்பு பெண் குழந்தைகள் மீட்பு காவல் அமைப்பு மையப்படுத்தி வழக்குகள் கண்காணிக்கப்படுவதால் எந்த அதிகாரியும் காணாமல் போகும் பெண் குழந்தைகள் கடத்தல் வழக்கில் அலட்சியமாக இருக்க முடியாது என அந்த காவல் அமைப்பின் தலைவர் SSP பப்லு குமார் தெரிவிக்கிறார்.

இந்த தனிச்சிறப்பு பெண் குழந்தைகள் மீட்பு காவல் அமைப்பு பரிட்சார்த்த முறையில் ஆக்ராவில் நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதால் கூடிய விரைவில் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த இருப்பதாக டி ஜி பி தெரிவித்துள்ளார்.

  • ராஜேஷ் ராவ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.