திருப்பரங்குன்றம் மலை உச்சி கோயிலில் தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் இருவர் கைது!

Published:

thirupparankundram-deepam-lighted-hindumunnani-activists-arrested
thirupparankundram-deepam-lighted-hindumunnani-activists-arrested

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரியமான கைலாசநாதர் கோவில் அருகே தடையை மீறி கார்த்திகை தீபம் ஏற்றிய இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கே இந்துக்களின் விழாக்களுக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில் பின்னாளில் சிக்கந்தர் பாவா தர்கா அமைக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது. இங்குள்ள கைலாச நாதர் கோவிலில், 1967 ஆம் ஆண்டு வரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.

அதன் பின், திட்டமிட்டவகையில், இரு பிரிவினரிடையே தகராறு ஏற்படுத்தப் பட்டது. இதன் காரணமாக கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்து அமைப்புகள் உயர் நீதிமன்றம் சென்று மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி பெற்றனர்.

ஆனால் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு காரணங்களைக் காட்டி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் மலை உச்சியில் உள்ள கைலாசநாதர் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றினர். உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதனை அமல்படுத்ததாக காவல்துறை, கைலாசநாதர் கோவில் தூணில் தீபம் ஏற்றியது குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப் பட்ட நபர்களைத் தேடி வந்தனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இந்நிலையில் வில்லாபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் கீரை துறையை சேர்ந்த அரசுப் பாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மலைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இருவரையும் கைது செய்தனர்!

Related articles

Recent articles

spot_img