metro-sreedharan
metro-sreedharan

பள்ளி நாட்களில் இருந்தே நான் ஒரு ஸ்வயம்சேவகன்! என் வாழ்க்கையின் அனைத்து அடிப்படை மதிப்பீடுகளுக்கும் பின்னால் ஆர்.எஸ்.எஸ் உள்ளது என்கிறார் மெட்ரோமன் ஈ ஸ்ரீதரன்!

பா.ஜ.கட்சி மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தலைமையிலான மாநிலம் தழுவிய விஜய யாத்திரையின் போது பாஜக.,வில் சேர்கின்ற மெட்ரோமன் ஈ ஸ்ரீதரன், ஆர்.எஸ்.எஸ் உடனான தனது பல பத்தாண்டுகால தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது பள்ளி நாட்களிலிருந்து ஒரு ஸ்வயம்சேவகன் என்றும், இந்த வாழ்க்கையில் அனைத்து அடிப்படை மதிப்புகளையும் சங்கம் அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், கட்சியின் முற்போக்கான கண்ணோட்டத்தைக் கண்டு பாஜகவில் இணைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர் வேட்புமனு குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ​​இ.ஸ்ரீதரன், தகுந்த நேரத்தில் தனது கட்சி அது குறித்து முடிவெடுக்கும் என்று கூறினார். பாஜகவில் சேருவதற்கான முடிவு அவசரகதியில் எடுக்கப் பட்ட முடிவு அல்ல, ஆனால் நன்கு சிந்தித்து எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கேரளத்துக்கு பாஜக., மட்டுமே வளர்ச்சியைக் கொண்டு வந்து தர முடியும் என்ற தனது உறுதியான நம்பிக்கையை இ.ஸ்ரீதரன் வெளிப்படுத்துகிறார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending