
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் காவல்துறையில் 11 ஆண்டுகள் சேவையாற்றிய மோப்ப நாய்க்கு போலீஸார் பிரியாவிடை அளித்தனர்.
நாசிக் காவல்துறையின் அங்கமான வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவில் ஸ்பைக் என்ற மோப்ப நாய் கடந்த 11 ஆண்டுகளாக சேவையாற்றி வந்தது.

இந்த ஸ்பைக் பல விடை கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில் காவல்துறையினருக்கு உதவி செய்துள்ளது. எனவே அதன் பங்களிப்பை பாராட்டும் வகையில் சிறப்பான பிரியாவிடை அளிக்கப்பட்டது.
பலூன்கள், ரோஜாப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட போலீஸ் ஜீப்பின் பானட் மீது ஸ்பைக் படுத்திருந்தது. அப்போது ஜீப்பின் இருபுறமும் போலீஸார் கைதட்டி அந்த நாய்க்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடந்து வந்தனர்.

இது குறித்த வீடியோவை மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்பைக் வெறும் நாய் மட்டுமல்ல, போலீஸ் குடும்பத்தில் ஓர் அங்கம். அது நாட்டுக்கு செய்த சேவைக்காக வீரவணக்கம் செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மோப்ப நாய் ஸ்பைக்குக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் மோப்ப நாயின் பங்கு காவல்துறை மற்றும் ராணுவத்தில் அளப்பறியது என்பது தெரியவருகிறது.
नाशिक पोलिसांसाठी बॉम्ब शोधण्यात तरबेज असलेला "स्निफर स्पाईक" डॉग एवढीच त्याची ओळख नव्हती! गेली ११ वर्षे तो इमानेइतबारे देशसेवा करीत होता. म्हणूनच कुटुंबातील एक सदस्य निवृत्त झाल्याच्या भावनेने पोलिसांनी त्याला असा शाही निरोप दिला. या श्वानाला माझा सलाम!@nashikpolice pic.twitter.com/7vD5kfGH8I
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) February 25, 2021



Leave a Reply