பொதுஇடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: மாநகராட்சி அதிரடி!

அடடே... அப்படியா? மதுரை லைஃப் ஸ்டைல்
facemask - 2026

மதுரை: கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் மீண்டும் தமிழகத்தில் மெல்ல அதிகரித்து வருகிறது

இதை அடுத்து மதுரை மாவட்ட ஆட்சியாளர்அன்பழகன் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் மார்ச் 9ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்… பொது இடங்களில் கட்டாயமாக பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும்; இல்லை எனில் அபராதம் விதிக்கப் படும் என்று தெரிவித்திருந்தார் .

இந்த நிலையில் , மதுரை மாநகர சுகாதார அலுவலர் உத்தரவின்பேரில் , மதுரை மாநகர் முழுவதும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் அதிரடியாக பொதுமக்கள் கூடும் உணவகங்கள் டீக்கடை உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாத ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். 

இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76,  77 வார்டு பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பால்பாண்டி தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தலா ரூபாய் 200 வீதம் அபராதம் விதித்தனர்.

பொது இடங்களில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என கடை ஊழியர்களுக்கும் மற்றும் வெளியே வரும் பொதுமக்களுக்கும்  கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என  கேட்டுக் கொள்ளப்பட்டது .

இதுபோன்ற,  நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என,  சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.