மதுரை மாவட்டத்தில் 254 பேர் வேட்புமனு தாக்கல்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai returning officer - 2026

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 216 ஆண்கள், 37 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என 254 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் பெரும் பரபரப்புக்கிடையே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பேசிய கோபாலகிருஷ்ணன் தேர்தல்அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் ஒரு சிறந்த அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைப்போம் என்று கூறினார்

மேலூர் தொகுதி திமுகவிற்கு ஒதுக்காத நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸிக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சார்பில் ஆலாத்தூர் ரவிசந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்,

இந்நிலையில், மேலூர் தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப் படாததால் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி ஒருங்கினைப்பாளரான பாலன், தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் மனு தாக்கல் செய்தார். இவரது மனைவி, ராஜிபாலன், மாவட்ட கவுன்சிலர், திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உடன் இருந்தனர்.

மேலூர் சட்டமன்ற தொகுதியில், போட்டியிடுவதற்காக காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிடுகின்றது,
இதனையொட்டி , காங்கிரஸ் கட்சி சார்பில், ஆலாத்தூர் ரவிசந்திரன் வருவாய்கோட்டாசியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்,
மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாற்று வேட்பாளராக, அவருடைய மனைவி அம்மாபிள்ளை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.