பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெல்லை சைவ வேளாளர் பெருமக்கள் ஆதரவு!

Published:

nellai bjp candidate nagendran - 2026

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, நெல்லை மாநகர சைவ வேளாளர் பெருமக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் பெருமக்கள் கூட்டம் பாளை தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் மாரியப்பன் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் பி.மாரியப்பன் தலைமை தாங்கினார்.

P. செந்தில் (செயலாளர் KTCநகர் & VM சத்திரம் சைவ வேளாளர் சங்கம்), R.P.லட்சுமணன் (தலைவர் என்ஜிஓ காலனி சைவ வேளாளர் சங்கம், கிருஷ்ணாபுரம்) G.பாலமுருகன் ( இளைஞரணி மாவட்ட பொருளாளர்) S.முத்துசாமி (தியாகராஜநகர் சங்க பொருளாளர்) V.சுந்தரலிங்கம் (தியாகராஜநகர் சங்க செயற்குழு உறுப்பினர்) K.சங்கரநாராயணன் (காந்திநகர் சைவ வேளாளர் சங்க தலைவர்), S.சுவாமி (சைவ வேளாளர் பேரவை கௌரவ ஆலோசகர்) C.சுப்பிரமணியன் (துணை பொருளாளர், கேடிசி நகர் சைவ வேளாளர் சங்கம்) அக்வா T.சுந்தர் (தலைவர், சமாதானபுரம் சைவ வேளாளர் சங்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

சிறப்பு அழைப்பாளராக, நயினார் நாகேந்திரன் (நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர்) கலந்து கொண்டார். மேலும், கா.குற்றாலநாதன் (உயர் நீதிமன்ற மத்திய அரசு வழக்கறிஞர்) செந்தில்ஆறுமுகம் (அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்) தயாசங்கர் (பாஜக நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் : பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த மத்திய பாஜக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தமிழக அரசிலும் அதனை அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு சைவ வேளாளர் சமுதாயம் சார்பாக ஆதரவளிப்பது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தான் வெற்றி பெற்று முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு துறையிலும் அமுல்படுத்த தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என உறுதி அளித்தார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இந்தக் கூட்டத்தில் சந்தானம் , நட்டார் , தெய்வநாயகம் , சரவணன் , நல்லபெருமாள் பிரமநாயகம் சுடலை உட்பட பலர் கலந்து கொண்டனர்

Related articles

Recent articles

spot_img