ஆதாரில் முக்கிய விவரங்களை திருத்த வேண்டுமா?

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
aadhar
aadhar

இந்தியர்களின் முக்கிய அடையாள அட்டை, முகவரி ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது ஆதார் கார்டு. இதனை அரசு பெரும்பாலான சேவைகளில் ஆதாரினை காட்டாயமாக்கி வருகிறது.

குறிப்பாக வங்கி கணக்கு, பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரி கணக்கு இப்படி பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆதார் கார்டில் ஏதேனும் சிறிய பிரச்சனை என்றாலும், முன்பெல்லாம் ஆதார் மையங்களை நோக்கி செல்ல வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு உங்களது ஆதாரில் முகவரி மாற்றமோ அல்லது பெயர் மாற்றமோ? மொபைல் எண் மாற்றமோ செய்ய வேண்டும் எனில், தற்போது பெரும்பாலான சேவைகளை ஆன்லைனிலேயே பெற முடியும்.

உங்கள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் மிகவும் முக்கிமானதொரு விஷயமாகும். ஏனெனில் நீங்கள் அதனை பல்வேறு சேவைகளிலும் பயன்படுத்த முடியாது. ஆக இதுபோன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டுமெனில், கட்டாயம் உங்களது மொபைல் எண்ணினை ஆதாருடன் இணைக்க வேண்டும்.

இதற்காக நீங்கள் பெரியதாக எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை. இதற்காக அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்.

இதே உங்களது மொபைல் நம்பர் தொலைந்துவிட்டது. ஆக OTP இல்லாமல் மொபைல் எண்ணை எவ்வாறு அப்டேட் செய்வதற்கும் ஆப்சன் உண்டு. இதற்காக ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு மையத்திற்குச் செல்லவும்.

ஆதார் அப்டேட் Form நிரப்பவும். உங்களிடம் இருக்கும் மொபைல் எண்ணை Form யில் எழுதுங்கள். உங்கள் பழைய மொபைல் எண்ணை form யில் எழுத தேவையில்லை. உங்கள் கோரிக்கையை பதிவு செய்யப்பட்டு அப்டேட் செய்யப்படும். இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏனெனில் நீங்கள் ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய UIDAI-யின் இணையத்தில் லாகின் செய்து தான் மாற்ற முடியும். ஏனெனில் உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும்.

உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையெனில், உங்களால் எதையும் மாற்றம் செய்ய முடியாது. ஒரு வேளை நீங்கள் மொபைல் எண் பதிவு செய்யவில்லை எனில்., அருகில் உள்ள ஆதார் அப்டேட் செண்டர் தான் செல்ல வேண்டும்.

ஆக UIDAI-யின் பக்கத்தினை லாகின் செய்து வெரிபிகேஷன் செய்த பிறகு உங்களது 12 இலக்க ஆதார் நம்பரை கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு, உங்கள் பதிவு எண்ணுக்கு ஒரு எஸ் எம் எஸ் வரும். அதில் ஒரு லிங்க் வரும். அந்த லிங்கினை கிளிக் செய்து agree என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு ஓடிபி எண் வரும்.

அதனை கொடுத்து, கேப்சா கோடினையும் பதிவும் செய்ய வேண்டும். இதன் பிறகு நீங்கள் SRN நம்பர் மொபைல் எஸ் எம் எஸ் வழியாக வரும். இப்போது SRN நம்பரை வைத்து, முகவரி அல்லது மொபைல் எண் மாற்றம் செய்யலாம். மாற்றம் செய்த பிறகு சப்மிட் கொடுக்கவும். சேவ் செய்து, சப்மிட் செய்யவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.