பணியின்போது உயிரிழந்த காவல் ஆளிநர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி!

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
tenkasi dt police - 2026

பணியின்போது உயிரிழந்த 3 காவல் ஆளிநர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலையா, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன், ஆலங்குளம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியாக தலா 3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

காசோலையை இன்று(12.04.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.