பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று; மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
ponnar interview
ponnar interview file picture

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொரானா தொற்று காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்த போது… நேற்று எனக்கு கொரோனா தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை செய்த போது, தொற்று உறுதியானது. மிகச் குறைந்தளவு தாக்கம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். நான் ஏற்கனவே இரண்டு தவனை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டிருப்பதால் தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பதாக தெரிகிறது.

எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம். கொரோனாவை வெல்வோம்!!.. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.