இஎஸ்ஐ, ரயில்வே மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கோரிய வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

Published:

madurai high court
madurai high court

இஎஸ்ஐ, ரயில்வே மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வழங்க கோரிய வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இஎஸ்ஐ, ரயில்வே மற்றும் ராணுவ மருத்துவமனைகள், மத்திய நிறுவனங்களுக்கு சொந்தமான மருத்துவமனைகளில்  கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

மதுரையை சேர்ந்த புஷ்பவனம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் கொரோனா நோய்த் தொற்றின் பரவல் அதிதீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் நடுத்தரக் குடும்பத்தினரும், ஏழை எளிய மக்களும் மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றிற்கு செலவு செய்வதற்கு போதிய பணம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இஎஸ்ஐ மருத்துவமனைகள், ரயில்வே மற்றும் ராணுவ மருத்துவமனைகள், மத்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான மருத்துவமனைகள்  உள்ளன. இந்த அனைத்து மருத்துவமனைகளையும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மேலும்  பணியிலிருக்கும் நபர்களின் வருமானத்திலிருந்து ஒரு சிறிய தொகை பிடித்தம் செய்து அதன் மூலமாகவே இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

ஆனால் தற்போது வரை மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.எனவே,  ஈஎஸ்ஐ மருத்துவமனைகள், ரயில்வே மற்றும் ராணுவ மருத்துவமனைகள், மத்திய நிறுவனங்களுக்கு சொந்தமான மருத்துவமனைகளில்  கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கவும், அங்கு முறையான் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் வெண்டிலட்டர் வசதி ஆகியவை செய்து தர உத்தரவிட வேண்டும்.” என கூறியிருந்தார்.

கொரோனா தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில்  விசாரணைக்காக மாற்றப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி  செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, ஈஎஸ்ஐ மருத்துவமனைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய முழுக்கவே ஈஎஸ்ஐ. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கலாமே? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும், இதனை உற்றுநோக்குவதோடு, வழக்கு குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img