வயிற்றுவலி என மருத்துவமனை சென்ற சிறுமி… ஸ்கேன் பார்த்த டாக்டர் அதிர்ச்சி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
hair in stomach
hair in stomach

வயிற்று வலியோடு மருத்துவமனைக்கு சென்ற சிறுமி… ஸ்கேன் செய்தபோது மருத்துவர்களுக்கு அடித்த ஷாக்…

நமக்கெல்லாம் பசி எடுத்தால் நமக்கு பழக்கமான உணவு வகைகளான சாதம் சப்பாத்தி பழங்கள் எவ்வாறு ஏதாவது ஒன்றை உண்போம். ஆனால் இந்த சிறுமி என்ன சாப்பிட்டாள் பாருங்கள்… என் ரூட்டே செபரேட்டு என்பதாக தலைமுடியைத் தின்றுள்ளாள்.

வயிற்று வலியால் துடித்த அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர் பெற்றோர். வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்தனர் மருத்துவர்கள்.

அந்த பெண்ணுக்கு 17 வயது. கடந்த 5 மாதங்களாக அவளுடைய உணவே அவள் தலைமுடிதான். அந்தப் பெண் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அவ்வப்போது தன் தலை முடியை பிடித்து இழுத்து வாயில் போட்டு விழுங்குகிறாள் என்று மருத்துவரிடம் பெற்றோர் விவரித்தனர்.

அடிக்கடி வயிற்று வலியும் வாந்தியும் வந்து கொண்டிருந்ததால் மே 31-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்தபோது வயிற்றில் தலைமுடி சேர்ந்திருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

உஸ்மானியா யுனிவர்சிட்டி மருத்துவ மனையில் இரண்டு மணி நேரம் சிரமப்பட்டு அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையை முடித்தனர். பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் 170 சென்டி மீட்டர் நீளம் 2 கிலோ எடை கொண்ட மயிர் உருண்டையை டாக்டர்கள் வெளியில் எடுத்தார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்பே அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தாலும் அந்தப் பெண்ணுக்கு கோவிட் தொற்று வந்ததால் தாமதமாக அறுவை சிகிச்சை செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.