sleep - 2026

ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் தற்போது ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கியே பொழுதை கழிக்கிறாராம்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம். 41 வயதாகும் இவர் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா எனும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் 23 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டார்.

இவர் பத்வா கிராமத்தில் பலசரக்கு கடையை நடத்தி வருகிறார். இந்த வினோத நோயால் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே அவர் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்கிறார்.

இந்த வியாதியின் தொடக்கத்தில் 5 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாராம்.

purkaram - 2026

நாளடைவில் 20 முதல் 25 நாட்கள் வரை தூங்க தொடங்கினார். இவரை எழுப்புவதற்கு அவரது குடும்பத்தினர் மிகவும் பாடுபடுகிறார்களாம்.

முதலில் ஏதோ அசதியால் இவர் தூங்குவதாக மருத்துவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் இவரது தூக்க நாட்கள் அதிகரித்தவுடன் இது ஒரு வினோத நோய் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இது போல் ஒரு வியாதி இருந்ததால் அவரே தூக்கத்திலிருந்து எழ நினைத்தாலும் அவரது உடல் ஒத்துழைக்காது.

தூங்குவதற்கு ஒரு நாள் முன்னர் கடுமையான தலைவலியை சந்திக்கும் புர்காரம், தூக்கத்திலிருந்து உணவு அருந்தவும் எழுந்திருக்க மாட்டாராம். இதனால் அவர் தூங்கும் போதோ உணவை ஊட்டுகிறார்களாம். இப்படியாக ஆண்டுக்கு 300 நாட்கள் வரை தூங்கியே கழிக்கிறாராம்.

sleep purkaram - 2026

இந்த நோய் குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். எனினும் கடவுள் அருளால் இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என அவரது மனைவி லிச்மி தேவியும் தாய் கன்வாரி தேவியும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

புர்காரம் தூங்கும்போதே அவரை குளிக்க வைக்கும் பணிகளையும் அவரது மனைவி செய்கிறார். இந்த நோய் டிஎன்எஃப் ஆல்பா என்ற மூளைக்கு செல்லும் புரோட்டீன் குறைவால் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending