spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?உணர்ச்சி இருந்தால்... எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்!

உணர்ச்சி இருந்தால்… எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்!

- Advertisement -
hrnce office e1561694728558
hrnce office e1561694728558

தமிழ்நாடு அரசின் “அர்ச்சகர் நியமன” விவகாரத்தின் பின்னணியில் கோயில் பாரம்பரிய ஒழிப்புக்கான ஒரு தீவிரமான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பதற்கான தடயங்கள் தெரிகின்றன.

அண்மையில் செய்யப்பட்ட 24 நியமனங்களே சட்ட விரோதமானதா என்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில், 200க்கும் மேற்பட்ட புதிய “அனைத்து சாதி அர்ச்சகர்கள்” தயார் நிலையில் வைக்கப் படுவதாகவும், இவர்கள் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் என்று சான்றிதழ் வழங்குமாறு சிவாச்சாரியார்களும் பட்டாச்சாரியார்களும் மிரட்டப் படுவதாகவும் செய்திகள் கசிகின்றன.

அடுத்த கட்டமாக மதுரை, திருவண்ணாமலை போன்ற பிரதான கோயில்களில் “இறக்குவதற்காக” இந்த தயாரிப்பாம். இந்த நபர்கள் எப்படித் தேர்வு செய்யப் படுகிறார்கள் என்று ஒன்றும் தெரியாத நிலையில், இவர்களில் திமுக கட்சிக்காரர்கள், பெரியாரிஸ்டுகள், சீமானின் தம்பிகள், இந்துப் பெயர் வைத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள், நக்ஸல் ஆதாரவாளர்கள் ஆகியோர் கட்டாயம் இருப்பார்கள் என்பதை ஊகிப்பது கடினமல்ல. இவர்களை அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் என்ற பெயரில் ஆலயங்களுக்குள் ஊடுருவ வைப்பதே மைய நோக்கமாக இருக்கலாம்.

நிற்க. “அர்ச்சகர்கள் யாரையும் பணியிலிருந்து நீக்கி விட்டு, அந்த இடத்தில் புதிய நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்காவது நடந்திருந்தால் சுட்டிக்காட்டுங்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது ஊரை ஏமாற்றும் வேலை.

நடைமுறையில் கோயில்களில் இந்து அறநிலையத்துறையின் அர்ச்சகர், பணியாளர் நியமனங்கள் எப்படி நடக்கின்றன என்பது குறித்த விஷயம் தெரிந்தவர்களுக்கு முதல்வரின் ஏமாற்று உடனே புரிந்து விடும். ஏராளமான கோயில்களில் 10-15 வருடங்களாக, அதற்கும் கூட மேலாக, அதிகாரபூர்வ நியமனம் என்பதே இல்லாமல் முற்றிலும் நம்பிக்கை அடிப்படையில் அர்ச்சகர்களும், மற்ற பணியாளர்களும் (பெரும்பாலும் அப்பாவிற்குப் பிறகு மகன் என்ற ரீதியில்) பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளே இருந்ததற்கான ஆதாரமே ஆவணத்தில் இல்லை என்பதால், வெளியேற்றியதையும் நிரூபிக்க முடியாது. இதுதான் கதை.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப் படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றே தோன்றுகிறது. அப்போது விசாரணையில் மேற்சொன்னது போன்ற ஓட்டைகள், முறைகேடுகள் அம்பலமாகும். ஆனால், நான் நேற்று எழுதியிருந்தது போல, சட்டபூர்வமான நடவடிக்கைகள் அதற்கே உரிய நத்தை வேகத்தில் நடந்துகொண்டிருக்கையில், களத்தில் கோயில்களுக்குள் மேற்படி நபர்கள் தொடர்ந்து ஊடுருவுதலும் அதன் பக்க விளைவுகளும் ஏற்படும், ஏற்கனவே மோசமான நிலைமயிலிருக்கும் கோயில் மரபுகள் முற்றிலுமான சீரழிவை சந்திக்கும். இறுதித்தீர்ப்பு கோயில் மரபுகளுக்கும் அர்ச்சக குடிகளுக்கும் சாதகமாக வந்தாலும் கூட, இடையில் பெரும் குழப்பங்கள், அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்கும். எனவே உடனடியாக இதைத் தடுத்து நிறுத்துவது அவசியம்.

இவ்வளவு அபாயங்களுக்கான சாத்தியக் கூறுகள் கொண்ட இந்த விஷயத்தில், அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து சைவ ஆதீனங்களோ, வைணவ மடங்களோ ஒரு சிறு எதிர்ப்பைக் கூட வெளிப்படுத்தவில்லை. வாயைத் திறந்தால் எங்கே அவர்களும், அவர்களின் மடங்களும் ஸ்தாபனங்களும் அரசின் ஆக்கிரமிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாவார்களோ என்ற பயம் அவர்களுக்கு. சமயத்தைக் கட்டிக்காக்க வேண்டிய இந்த அமைப்புகளே மௌனம் சாதிக்கையில், அரசியல் கட்சிகளும் மற்றவர்களும் ஏன் எதிர்க்கவில்லை என்று விசனப்படுவதில் என்ன அர்த்தமிருக்கிறது? திராவிட அரசியலின் பிடி எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் இறுகியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

ஆதிசைவர் Thillai Karthikeya Thathpurusha Sivam, வைகானஸர் DrParthasarathy Bhattar போன்ற வெகுசிலரே அர்ச்சகர் சமுதாயங்களின் சார்பாக சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவர்களது தரப்பை கவனப் படுத்துவது அவசியம்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது, எந்த எதிர்ப்பும் இல்லை என்பதைத் திமுக கொத்தடிமைகளும் அவர்களது ஏவலர்களான தமிழ் ஊடகங்களும் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிரான நீடித்த எதிர்ப்பை மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி வெளிப்படுத்தினர். நீதிமன்றமும் இதைக் கவனிக்கத் தவறவில்லை. ஆனால், அதைவிடவும் கூட சீரியஸான இந்த விவகாரத்தில் இதுவரை தமிழ்நாடு பிராமணர் சங்கம், ஒரு வேளாளர் அமைப்பு என்று வெகுசிலரே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளர் . இந்த சூழலில், இந்துமதத்தின் மீதும் கோயில் பாரம்பரியங்களின் மீதும் உணர்வுபூர்வமான பற்றுக் கொண்டவர்கள் அனைவரும் வெளிப்படையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

ஆப்கானிஸ்தானில், தாலிபான் என்னைக் கொன்றாலும் கோயிலை விட்டு நகரமாட்டேன் என்று அங்கு எஞ்சியிருக்கும் கடைசி இந்துவான அர்ச்சகர் ராஜேஷ் குமார் பண்டிட்ஜி கூறியுள்ள செய்தி இணையமெங்கும் வலம் வருகிறது. அதைவிட மோசமான நிலைமையா தமிழ்நாட்டில் உள்ளது? தமிழ்நாட்டின் சமயத் தலைவர்களே, அச்சமின்றி முன்வந்து உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். ஓம் சக்தி.

  • ஜடாயு, பெங்களூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe