இப்படி எல்லாம் பண்ணாதீங்க: ஆண்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
beens
beens

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவர், சுய பாலியல் இன்பத்திற்காக, தனது ஆண்குறியில் 6 கிட்னி பீன்ஸை செருகியிருக்கிறார்.

அது, விந்து வெளியேறும்போதோ அல்லது சிறுநீர் கழிக்கும்போதோ வெளியே வந்துவிடும் என நினைத்துள்ளார். ஆனால் அந்த பீன்ஸ் கொட்டைகள் வராததால் விபரீதமானது.

பீன்ஸ் தவறான இடத்தில் சிக்கியதால் திணறிப்போன அந்த இளைஞர் மிச்சிகனில் உள்ள ஸ்பாரோ மருத்துவமனை மருத்துவர்களிடம் தஞ்சம் அடைந்தார். தன்னால் சிறுநீர் கழிக்க இயலவில்லை என்றும் அந்த இளைஞர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து மருத்துவர்களிடம் நடந்ததை அந்த இளைஞர் கூறும்போது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பீன்ஸை வெளியேற்ற திட்டமிட்டனர்,

பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிஸ்டோஸ்கோபி மற்றும் சிறுநீர்க்குழாயில் அறுவை சிகிச்சை செய்யபட்டு பீன்ஸ் கொட்டைகள் வெளியே எடுக்கப்பட்டன.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில், இளைஞரில் சிறுநீர்க்குழாயில் ஆறு பீன்ஸ் இருந்தது, அவை ஒவ்வொன்றும் 15 மிமீ அளவு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதுபோன்று அந்த இளைஞர் பல முறை சுய இன்பத்தை அனுபவிக்க பீன்ஸ் கொட்டைகளை தனது இனப்பெருக்க உறுப்பில் செலுத்தியுள்ளதாகவும், இந்த முறை தான் 6 பீன்ஸ் கொட்டைகளை விட்டதாகவும் தெரிகிறது.

அதிர்ஷ்டவசமாக இளைஞருக்கு பெரிய ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த மருத்துவர்கள், ஒரு சிலருக்கு இதுபோன்று செய்வதால் உயிர் கூட பறிபோயிருப்பதாக தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.