images 20 2 - 2026

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி இருவர் பலி..

சற்றுமுன்

பெரம்பலூர் அருகே இடி மின்னல் தாக்கியதில் இருவர் இன்று பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே ஆத்தூர் செல்லும் சாலையில், கோனேரிப்பாளையம் இன்று மாலை பலத்த இடி மின்னல் வெட்டியது.

மின்னல் தாக்கி பெரம்பலூர் கம்பன் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். வெங்கடேஷ்(22), என்ற வாலிபர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

images 20 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.