kaithu e1563169848461
kaithu e1563169848461

சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள புக்கிளிபாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் உள்ளது இந்த பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்து தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் முகமது மொட்லிப், அஷ்ரப்புல், முகமது உசல்மியா, சையது உல்லா இஸ்மாயில் என்பதும் அவர்கள் 5 பேரும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரிடமும் திருப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா, பாஸ்போர்ட் உள்பட எந்த ஆவணமும் இல்லை என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் ஒரு வருடமாக பனியன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

இதனையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு குறைந்த போது அதன் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending