நான் தூங்கியே நாளானது.. அது ஏன்? எனக்கொரு வியாதி வந்தது..!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
sleep - 2026

ஒரு நாள் நாம் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் நம்மால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது.தலை வலி, உடல் வலி என்று எல்லா வலியும் வந்து விடும். இதனால் பலர் தூக்க மாத்திரைக்கு அடிமையாகி விடுகின்றனர்.

அப்படியாவது நான் தூங்கி விட வேண்டும் என்று அநேகர் தற்போது உள்ள காலகட்டத்தில் தூக்க மாத்திரை எடுத்து வருகின்றனர். ஆனால் இங்கு பெண்ணுக்கு தூக்கம் இல்லாமை ஒரு பெரும் வியாதியாகவே உருவெடுத்து உள்ளது.,

லி ஜானிங் என்ற பெண் ஒருவர், சீனாவின் கிழக்கு மாகாணமான ஹெனானையில் வசித்து வந்துள்ளார்.
இவரிடம் தூக்கம் இல்லை என்ற விசித்திர வியாதி கண்டறியப்பட்டுள்ளது.

தனக்கு 5 வயதாக இருக்கும்போது ஒருமுறை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டதாகவும், அதன் பின்னர் இதுவரை ஒருபோதும் தூங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர், இவரின் இந்த கூற்றை சோதிக்க பலர் முயன்று, கடைசியில் அவர்கள் தூங்கிப்போயுள்ளனர்.

ஆனால் லி ஜானிங் மட்டும் தூக்கமின்றி, புத்துணர்வுடன் காணப்பட்டுள்ளார். மட்டுமின்றி, அவரது கணவரும் தமது மனைவி தூங்குவதை தாம் இதுவரை பார்த்ததில்லை என உறுதி செய்துள்ளார்.

ஊரே தூக்கத்தில் இருக்கும் போது லி ஜானிங், வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளில் மும்முரமாக இருப்பார் என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

மனைவியின் இந்த தூங்காத நிலையால் கவலை கொண்ட அவரது கணவர், தூக்க மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அதனாலும் தூக்கம் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

இதனிடையே மருத்துவர்கள் குழு முன்னெடுத்த தீவிர பரிசோதனையில், லி ஜானிங் தூங்குகிறார், ஆனால் அது விசித்திரமான முறையில் என கண்டறிந்தனர். அவர் தனது கணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது கண் இமைகள் கவிழ்வதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதுவே அவர் தூக்கத்தில் இருப்பதை உணர்த்துவதாகவும், ஆனால் அப்போதும் அவர் பேசிக்கொள்வதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், ஒரு நாளுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் அவரது கண்கள் மூடவில்லை என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.