எங்கெங்கு காணினும் நூல்கள்! நூலகமாக மாறிய கிராமம்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
book
book

ஒரு கிராமம் முழுவதும் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது புத்தக பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திற்குட்பட்ட பெரும்குளம் கிராமத்தின் தெருக்களில் குருவிக் கூடுகள் போல் அலமாரிகள் செய்யப்பட்டுள்ளன.

அதில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கிராமம் முழுவதும் 11 இடங்களில் இதுபோல புத்தக அலமாரி வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிராம மக்கள் புத்தகங்களை எடுத்துப் படித்து வருகிறார்கள்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

book 1
book 1

கிராம மக்கள் பலர் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு, பிறகு அலமாரியில் வைத்துவிடுகின்றனர். மேலும் பலர் புத்தக அலமாரியின் அருகே அமர்ந்து படித்துவிட்டு மீண்டும் அங்கேயே வைத்து விடுகின்றனர்.

கிராமத்தினரின் இந்த நடவடிக்கையை, கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சகம் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளது.
புத்தக கூடு தொடர்பான வீடியோவை வெளியிட்டது.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கிராம மக்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஜூன் 19ஆம் தேதி, தேசிய வாசிப்பு தினத்தையொட்டி இந்த கிராமத்தைப் புத்தக கிராமம் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.