ஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்!

Published:

vijay-1
vijay-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய். இவரது ரசிகர்களின் ஒரே விருப்பம் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே.

ஆனால் விஜய்யோ மேடையில் அரசியல் பேசுவதோடு சரி, இதுவரை படங்களில் கூட முதல்வராகவோ, அரசியல்வாதியாகவோ நடித்ததில்லை.

இருப்பினும் விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டுமென அவரின் ரசிகர்கள் விட முயற்சி செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் என்ன நாம் வரவழைப்போம் என அவரை அண்ணா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்கள் போல சித்தரித்து நாளைய விடிவெள்ளி போன்ற வாசகங்களுடன் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

vijay
vijay

விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த் கூறுகையில், சமீப காலமாக, இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் அல்லது ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று கூறினார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

அப்படி என்னடா போஸ்டர்கள் ரசிகர்கள் வெளியிட்டார்கள் என்று பார்த்தால், எம்ஜிஆரை ஒப்பிட்டு போஸ்டர் இதெல்லாம் ஓவரா தெரியலயா? கொஞ்சம் கூட யோசிக்காமல், அரசியலில் சாதனை படைத்த தலைவர்களோடு ஆடியோ லாஞ்சில் மட்டும் அரசியல் பேசும் விஜய்யை ஒப்பிட்டால் யாருக்கு தான் கோபம் வராது? என் நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img