அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் மகத்தான சலுகை!

pension - 2026

மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தின் விதிகளை அரசு மாற்றியுள்ளது.

இந்த ஓய்வூதியம், மத்திய அரசு ஊழியர்களின் இறப்புக்குப் பிறகு அவர்களது குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது.

புதிய விதியின்படி, ஊழியர்களைச் சார்ந்திருப்பவர்கள் இப்போது மத்திய குடிமைப் பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972 இன் கீழ் ரூ .1.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு குடும்ப ஓய்வூதியங்களைப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். முன்பு, குடும்ப ஓய்வூதியத்தின் உச்சவரம்பு ரூ .45,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு (Central Government) தனது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சமூக பாதுகாப்பை வழங்குகிறது. மத்திய சிவில் சர்வீசஸ் (Central Civil Services, 1972) இன் 54 வது விதியின் (11) துணை விதியின் கீழ், கணவன் மற்றும் மனைவி அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களது குழந்தைகளுக்கு இரண்டு ஓய்வூதியங்களைப் பெற உரிமை உண்டு.

இந்த நிலையில், குடும்ப ஓய்வூதியத்திலிருந்த ரூ .45,000 என்ற வரம்பு, அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதில் தடையாக இருந்தது. ஆகையால் அரசாங்கம் இப்போது வரம்பை 1,25,000 ஆக உயர்த்தியுள்ளது.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னதாக, குடும்ப ஓய்வூதியம் தொடர்பான தொலைநோக்கு சீர்திருத்தத்தில், மேல் உச்சவரம்பு மாதத்திற்கு ரூ .45,000 லிருந்து ரூ .1.25 லட்சமாக உயர்த்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். பிப்ரவரி 2021 இல் மேல் உச்சவரம்பை ரூ. 45,000 லிருந்து ரூ .1,25,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

7 வது ஊதியக் கமிஷனில் (7th Pay Commission) அதிகபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ 2,50,000 ஆக உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் விளைவாக, CCS (ஓய்வூதிய) விதிகளின் விதி 54 (11) இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை மூலம் இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை சுமை குறைக்கப்படும் என்றும் அவர்களுக்கு போதுமான நிதி பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலத்துறை (DoPPW), பெற்றோர் இறந்த பிறகு இரண்டு குடும்ப ஓய்வூதியம் (Pension) பெற தகுதி பெறும் குழந்தைகளுக்கான தொகை குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories