
கைலாசா அதிபர்” நித்யானந்தா நவராத்திரி விழாவையொட்டி தினந்தோறும் ஒரு அலங்காரத்தில் வந்து பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறார்.
நித்யானந்தா கைலாஷா எனும் நாட்டில் இருப்பதாக தெரிவித்து வருகிறார். மேலும் அந்த நாட்டின் அதிபரும் தான்தான் என்கிறார். உண்மையில் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை.
தனது நாட்டிற்கான கொடியையும் பாஸ்போர்ட்டையும் அவர் வெளியிட்டு பெரும் அலப்பறை செய்தார். மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு கைலாசாவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவித்தார்.

அந்த நாட்டிற்காக கரன்சியையும் அவர் வெளியிட்டார். மேலும் தொழில் செய்ய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்தார். மேலும் தான் தனித்து இந்த கைலாசாவில் இருக்கும் போது தன்னை ஏளனமாக பேசியவர்கள் இன்று கொரோனாவால் அனைவரையும் தனித்து இருக்குமாறு அரசாங்கமே சொல்கிறது என கிண்டல் செய்தார்.
தினந்தோறும் வீடியோவில் தோன்றி பக்தர்களிடம் சத்சங்கம் நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் போல் அலங்காரம் செய்திருந்தார்.

இதை பார்த்த ஏழுமலையான் பக்தர்கள் நித்யானந்தாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இன்று நாடே கொரோனாவால் அவதிப்பட்டு வரும் நிலையில் நித்யானந்தாவோ எந்த வித கவலையும் இல்லாமல் இருந்து வருகிறார் என்றே தெரிகிறது.
இந்த நிலையில் மதுரையின் புதிய ஆதீனம் நான்தான் என்றும் பதவி ஏற்றுக் கொண்டு விட்டேன் என்றும் கூறிய அவர் மதுரை ஆதீனம் இறந்ததற்கு கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். ஆதீனத்தை அடக்கம் செய்யும் வரை கைலாசா நாட்டு மக்கள் உணவருந்த கூடாது என விதிகளை பிறப்பித்தார்.
மேலும் குழந்தைகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு அலங்காரங்களில் போட்டோக்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் நித்யானந்தா. நவராத்திரிக்கு வெவ்வேறு விதமான போஸ் கொடுத்து அமர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.