வீட்டிலிருந்து பூசணியை தூக்கிச் செல்லும் கரடி! வைரல்!

Published:

bear 1
bear 1

கனடாவில் கரடி ஒன்று பசியால் வாடிய நிலையில் அலங்கரிக்கப்பட்ட வீட்டிலிருந்த பூசணி பழத்தை தூக்கி செலல் முயற்சித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

கனடாவில் ஒன்ராறியோவில் உள்ள Sudbury-ல் Halloween பண்டிகைக்காக Ashley Larose என்பவரது வீட்டில் பழங்கள், செடிகொடிகள் கொண்டு அலங்கரித்துள்ளனர்.

அந்த அலங்காரத்தில் பூசணி பழங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் கரடி ஒன்று பசியால் வாடிய நிலையில் அந்த பகுதிக்கு வந்துள்ளது.

மேலும் அந்த கரடி அலங்கரிக்கப்பட்ட வீட்டிலிருந்து ஒரு பூசணி பழத்தை தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. இந்த காட்சிகள் Ashley Larose வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆனால் அந்த கரடியால் பூசணி பழம் பெரியதாக இருந்ததால் அதனை தூக்கி செல்ல இயலவில்லை. எனவே அந்த கரடி பூசணி பழத்தை தூக்க முயன்ற போது கீழே விழுந்த காட்சிகளும் காண்போருக்கு சிரிப்பலையை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.

ஆனால் வானவியல் நிபுணர்கள் இது நகைச்சுவையான விஷயமல்ல வீட்டில் இவ்வாறு பூசணி பழங்களை கொண்டு அலங்கரித்தால் அந்த வாசனையால் கரடிகள் ஈர்க்கப்படும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Related articles

Recent articles

spot_img