
தேசியக்கவியின் நூற்றாண்டு நினைவில்…
தினம் தினம் – பாரதி தினம்!
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நூற்றாண்டை தேசிய எழுச்சி ஆண்டாக நாம் கடைப்பிடிக்கிறோம்.
இந்த ஆண்டு முழுதும், பாரதியார் குறித்த கட்டுரைகளை ஒவ்வொரு நாளும் பல்வேறு எழுத்தாளர்கள், அன்பர்களிடம் இருந்து பெற்று நம் தமிழ் தினசரி ( https://dhinasari.com ) தளத்தில் பதிவு செய்யவுள்ளோம்…
கட்டுரைகளை அன்பர்கள் dhinasarinews@gmail.com இமெயிலில் அனுப்பி வைக்கலாம்.
~ கவிப்பாடல் : பத்மன் ~
என்னைப் போன்ற பலரது மானசீக குருநாதன் மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று (11/09/21).
ஒப்புமையில்லா அமரகவிக்கு எனது நினைவஞ்சலி.
வாழ்க பாரதி!
வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே
வானும் வையமும் வாழும் வரையினில்
வாழும் பாரதி பெருமையே
நீரும் நிலமும் சூழும் வரையினில்
சூழும் பாட்டுத் திறமையே
தீயும் வளியும் நீளும் வரையினில்
நீண்டு வழியைக் காட்டுமே
ஊனில் உயிரும் உறையும் வரையினில்
ஊக்கம் தந்து காக்குமே
வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே
அன்னை விலங்கை அறுத்து எறிய
ஆவேசப் பாக்கள் பொழிந்தவன்
முன்னைப் பெருமையை மீட்டுக் கொடுக்க
மூண்ட சுடராய் ஜொலித்தவன்
தன்னைப் பற்றிய எண்ண மின்றி
தாய்நாட்டுக் கென்றே உழைத்தவன்
பின்னை பாரதம் பீடு பெற்றிட
பேணும் நல்லறம் விதைத்தவன்
வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே
தமிழன் உணரா தமிழின் அருமையை
தரணி அறிய மொழிந்தவன்
தமிழின் உணர்வொடு தேசப் பற்றும்
தழைத்து ஓங்கிடப் புரிந்தவன்
தமிழில் மற்றவர் தகுந்த சாத்திரம்
தரமாய் பெயர்த்திட உரைத்தவன்
தமிழில் பேசி தமிழில் எழுதி
தமிழன் பெருமை காத்தவன்
வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே
பெண்ணின் அடிமை விலங்கை உடைத்து
பெருமை பொங்கச் செய்தவன்
மண்ணில் வாழும் மனிதர் யாவரும்
மகிமை ஓங்க நினைத்தவன்
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
மடமைத் தனத்தை வெறுத்தவன்
புனிதர் ஆக நம்மை உயர்த்த
புலமை தனத்தைக் கொடுத்தவன்
வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே
தகிட தகதிமி தகிட தகதிமி
தகிட தகதிமி தகிட தோம்
கவி பாடல் : பத்மன்




à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© தொடகà¯à®•à®®à¯. கவிஞர௠பதà¯à®®à®©à¯ அவரà¯à®•ளà¯à®•à¯à®•௠பாராடà¯à®Ÿà¯à®•à¯à®•ளà¯. à®®à¯à®©à¯ˆà®µà®°à¯ கà¯.வை.பா