550 கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!

அடடே... அப்படியா? இந்தியா
cake
cake

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தனது பிறந்தநாளில் கேக் வெட்டிய வினோத வீடியோ வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நபருக்கும் அவர்களது பிறந்த நாள் என்பது ஒரு சிறப்பு தினமாகும். இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாட விரும்புகிறார்கள்.

அதன்படி தற்போது மும்பையை சேர்ந்த நபர், தனது பிறந்தநாளில் கேக் வெட்டியே சோர்ந்து போகும் அளவுக்கு 550 கேக்குகளை வெட்டியுள்ளார்.

550 கேக்குகளை வெட்டுவது மட்டுமில்லாமல் இந்த செயலை செய்ய அவர் மும்பையின் காந்திவலி மேற்கு ரயில் நிலையத்தைத் தேர்ந்தெடுத்தார். 550 கேக்குகளை வெட்டி (Social Media) பிறந்தநாளைக் கொண்டாடுவது உண்மையிலேயே தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

சூர்யா ரதுரி என்ற இந்த நபர் தனது பிறந்தநாளை ரயில் நிலையத்தில் 550 கேக்குகளை வெட்டி கொண்டாடினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் இந்த வீடியோ தொடர்பாக மக்களிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்த வீடியோவில் அவருடன் பலர் காணப்படுகிறார்கள். இதனால் அவர் கொரோனா விதிகளை மீறி இந்த செயலை செய்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது உள்ளூர் மக்கள், மும்பை காவல்துறை மற்றும் மும்பை மாநகராட்சியிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவலின் விகிதம் இன்னுமும் பதிவாகி வரும் நிலையில் இது போன்ற செயல் கண்டிக்கத்தக்கது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.