நடுரோட்டில் அந்திரத்தில் தொங்கிய அரவு! அலறிய மக்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன்
snake
snake

மக்கள் நிறைந்த பொதுஇடத்தில் பாம்பு ஒன்று தென்பட்டால் எப்படி இருக்கும். அதுவும் நடந்து போகும் சாலையில் தீடிரென வானில் இருந்து பாம்பு விழுந்தால் அனைவருக்கும் ஒரு கணம் இதயமே நின்று போகிவிடும்.

அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மாபெரும் பாம்பு ஒன்று வானத்திலிருந்து சாலையில் விழுகிறது. அதை பார்த்த பொதுமக்கள் உயிரை காப்பாற்ற சாலையில் அலறியடித்து கொண்டு ஓட தொடங்கினார்கள். ஆனால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த வீடியோவில் மிக நீளமான பாம்பு ஒன்று வானில் இருந்து விழுவது போல் இருக்கும். ஆனால் அந்த பாம்பு கம்பி ஒன்றில் நீண்ட நேரமாக அமர்ந்துள்ளது. மெதுவாக பாம்பு அதன் பிடியை தளர்த்தி தரையில் விழுகிறது. பாம்பு கம்பியில் இருப்பதை பார்த்து அங்கிருக்கும் மக்கள் ஆரவார கூச்சலிடுகின்றனர். பாம்பு சாலையில் விழுந்த உடனை பிடிக்க மீட்பு படையினரும் அங்கு தயார் நிலையில் இருந்தனர்.

இந்த வீடியோவை பார்த்த பலர் அதனை ஷேர் செய்து கருத்துகள் தெரிவித்தும் வருகின்றனர்.பாம்பு கம்பி மீது இருந்த வரை அந்த இடத்தில் தைரியமாக இருந்த பலர் விழுந்த உடன் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.