பாம்பை விட்டுடுவேன்.. தடுப்பூசி போட வந்தவர்களை மிரட்டிய பெண்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
snake 1 1
snake 1 1

ராஜஸ்தான் மாநிலம் நாகிலவ் கிராமத்தை சேர்ந்தவர் கமலா தேவி, இவர் பாம்பாட்டி ஆவார். அந்த ஊரில் உள்ள வீடுகளுக்கு நேற்று வந்த மருத்துவ ஊழியர்கள் மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தினார்கள்.

அப்போது கமலா வீட்டுக்கும் வந்த ஊழியர்கள் அவரிடம் தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கூறினர். ஆனால் தன்னால் ஊசியை செலுத்தி கொள்ள முடியாது என மறுத்த கமலா கூடையில் இருந்த பாம்பை வெளியில் எடுத்து ஊழியர்களை நோக்கி மிரட்டினார்.

எனக்கு தடுப்பூசி செலுத்த முயன்றால் உங்கள் மீது பாம்பை ஏவி விடுவேன் என பயமுறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ஊர்மக்களின் உதவியை நாடினார்கள்.

பின்னர் ஒருவழியாக பேச்சுவார்த்தை நடத்தியதில் கமலா தடுப்பூசி செலுத்தி கொள்ள சம்மதித்தார். இதையடுத்து அந்த தெருவில் கமலா உள்ளிட்ட 2 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.