லோக்பால் தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதை மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மூன்றாவது முறையாக தவிர்த்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தில் வெறும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு மட்டுமே தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், தேர்வுக்குழு உறுப்பினராக தனக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அதிக எண்ணிக்கை உள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு லோக்பாலில் வழங்கப்பட வேண்டிய அங்கீகாரம் தமக்கு வழங்கப்படாததால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதிலோ, நடவடிக்கையோ இல்லை என்றும் பிரதமருக்கு மல்லிகார்ஜூன கார்கே எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



