இராணுவ வீரர்களுக்காக தயாரான வஜ்ரா!

Published:

vajra
vajra

சீனாவுடனான இந்தியாவின் கிழக்கு வடக்கு எல்லையை பாதுகாக்கும் வகையில் ராணுவ வீரர்களுக்கு பிரத்தியேக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்திய – சீனா எல்லை மோதல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. கடந்த 1975ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் 4 இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதையடுத்து எல்லையில் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த 1996ஆம் ஆண்டு இரு நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. 2 கிலோமீட்டர் தூரத்தில் துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதங்களும் பயன்படுத்தக்கூடாது என அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதில் இருந்து ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை.

vajra 1
vajra 1

கடந்த ஆண்டுகள் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த முதலில் சீனப் படை திட்டமிட்டு முள்கம்பிகள் சுற்றிய கட்டைகளை கொண்டுவந்து இந்திய வீரர்களை தாக்கினர்.

அந்த மோதலையும் இந்திய வீரர்கள் எதிர்கொண்டு சீனப்படையை விரட்டி அடித்தனர். இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் மோதல் ஏற்பட்டால் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் வஜ்ரா என்ற புதிய ஆயுதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

வேலைப் போல காட்சியளிக்கும் இந்த நவீன ஆயுதம், போலீசார் பயன்படுத்தும் தடியை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. தடிக்கு இடையே ஆணிகள் போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து சிறிய அளவிலான மின்சாரமும் வெளியேறுமாம்.

பாதுகாப்பு படையினருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த ஆயுதம் பொதுமக்களுக்கோ தனியார் நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப் படாது என வஜ்ரா தயாரிப்பு நிறுவனமான நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img