கவர்னர் மாளிகையில் கோழிக்கறி விருந்துண்ண வந்த கரடி! வைரல் வீடியோ!

bear 3
bear 3

சிக்கிம் மாநில கவர்னர் மாளிகையில் இமாலயக் கருப்புக் கரடி ஒன்று புகுந்து கோழிக்கறி சாப்பிடதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிக்கிம் மாநில கவர்னராக இருப்பவர் கங்கா பிரசாத் சௌராஸியா. நேற்று அங்கே கவர்னர் மாளிகையில் இரவு இமாலயப் பிரதேச கருப்புக் கரடி ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கவர்னர் மாளிகையின் ஊழியர்கள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த கிச்சனில் வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டுள்ளது. கரடி புகுந்த தகவல் அறிந்ததும் உடனடியாக வனச்சரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருட்டில் கரடியை பிடிப்பது கடினம் என்பதால் விடிந்த பிறகு கரடியைப் பிடிப்பது என்பது முடிவு செய்யப்பட்டது. அதனால் வனத்துறை காவலர்கள் விடியும் வரை ஆளுநர் மாளிகையைச் சுற்றி கரடி உள்ளே புகாமல் காவல் காத்தனர்.

விடிந்த பிறகு கரடி பிடிக்கக் களத்தில் இறங்கிய வனக்காவலர்கள் மதியம் வரை போராடி பதுங்கியிருந்த கரடியை பிடித்தனர். பயந்து போய் நீர் குழாயில் பதுங்கியிருந்த கரடியை துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.

bear 1 1
bear 1 1

கரடியைப் பிடித்தது குறித்து பகிர்ந்த வனச்சரகத்தினர், ‘இரவு முழுவதும் கவர்னர் மாளிகைக்குள் கரடி புகுந்துவிடாதவாறு காவல் காத்தோம். காலை முழுவதும் கரடியை வலைவீசித் தேடினோம். மதியம் வரை தேடியபிறகுதான் கரடி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.

நீர் வெளியேறும் குழாயில் கரடி பதுங்கியிருந்தது. அதை அடுத்து கரடிக்கு துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தினோம். முதல் ஊசி குறிதப்பியதை அடுத்து இரண்டாவது ஊசி செலுத்தி கரடியைப் பிடித்தோம். பிடிக்கப்பட்ட கரடியைத் தற்போது பங்கலகா வனவிலங்கு சரணாலயத்தில் விடவிருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இமாலயக் கருப்புக் கரடிகள் அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories