இன்ஸ்டாவில் அசத்தல்.. புது வசதிகள்!

Published:

instagram
instagram

இன்ஸ்டாகிராம் பதிவுகளை பயனர்கள் இனி தங்களது கணினியிலும் பதிவிடுவதற்கான வசதியை இன்ஸ்டாகிராம் செயலி அறிமுகப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கிறது இன்ஸ்டாகிராம் செயலி. சமூக வலைத்தள பயன்பாட்டில் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஒன்றாக உள்ளது.

பயனர்களின் தேவைகளுக்காக அவ்வப்போது இந்த செயலியில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பயனர்கள் தேவைக்கேற்ப கணினியில் தங்களது பதிவுகளை பதிவிடுவதற்கான வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது.

இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களின் வசதிக்கேற்ற வகையில் புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிகோரும் பதிவுகளுக்காக நிதிதிரட்டல் வசதியை இணைத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. அதேபோல் பதிவுகளைப் பதிவிடும்போது இதரப் பயனர்களை டேக் செய்வதை அவரை பிந்தொடர்பவர்களுக்கும் தெரிவிக்கும் வசதியும் அறிமுகமாக உள்ளதாகவும்

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

இதன்மூலம் குறிப்பிட்ட அந்தப் பதிவு பலரையும் சென்றடைவது எளிமையாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி உங்கள் படங்களை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவற்றை உங்கள் கணினியிலிருந்து நேரடியாக இன்ஸ்டாகிராமில் எளிதாக அப்லோடு செய்யலாம்.

இதற்கு முன் இன்ஸ்டாகிராம் பயனர்களை வெப் பதிப்பில் ஃபீட்களை மட்டுமே பார்க்க அனுமதித்தது. இது தவிர, உங்கள் அனைத்து இன்ஸ்டாகிராம் மெசேஜ்களையும் உங்கள் கணினியிலிருந்தும் அணுகலாம்.பல வருடங்களாக இது ஒரு போன் App ஆக மட்டுமே இருந்தது.

மேலும் பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனம் இப்போது பயனர்களுக்கு இந்த App யை பயன்படுத்த பல காரணங்களை வழங்குகிறது. நீங்கள் வெப் பிரவுசரில் வெறுமனே Instagram ஐ தேடலாம், பின்னர் உள்நுழைந்து “+” ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கண்டன்ட்டை அப்லோடு செய்யத் தொடங்கலாம்.

மேலும், மொபைல் பயனர்களுக்காகவும் நிறுவனம் சில அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Collabs test அம்சம் உள்ளது. இது போஸ்ட் மற்றும் ரீல்களை இரண்டு நபர்களை கோ ஆத்தர் செய்ய அனுமதிக்கிறது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இதற்காக, ஒரு நபரை ஈடுபடுத்த டேக்கிங் திரையில் (Tagging screen) இருந்து இன்னொருவரை அழைக்க வேண்டும்.இந்த வழியில், இரு பயனர்களின் ஃபாலோவர்பவர்களும் அந்த இடுகையைப் பார்க்க முடியும். இந்த அம்சம் ஃபாலோவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியை கணினியில் பயன்படுத்தும்போது கூகுள் உள்ளிட்ட தேடுபொறியில் இன்ஸ்டாகிராமை இணைப்பதன் மூலமே பதிவுகளை பதிவிட முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img