
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.. குறிப்பாக அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது..
அந்த வகையில் திருப்பதி கோயிலில் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டது.. எனினும் தொற்று பாதிப்பு குறைந்ததால், கடந்த மாதம் முதல் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனத்திற்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி வழங்கியது..
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு டிக்கெட்டுகளை தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.. ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்..
நவம்பர் மாத ஒதுக்கீட்டு சர்வ தரிசனம் டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவு இன்று (அக்டோபர் 23) காலை 9 மணி முதல் தொடங்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், டிசம்பர் 8 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களுக்கு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன..
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல உங்கள் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் இதோ:
- tiruupatibalaji.ap.gov.in என்ற திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ TTD வலைத்தளத்திற்குச் செல்லவும்.
- காலை 9 மணிக்குப் பிறகு டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்
- முன்பதிவு திறந்தவுடன், “சிறப்பு நுழைவு தரிசன (ரூ .300) டிக்கெட்டுகளை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் (Please click here to book Special Entry Darshan (Rs.300) tickets)” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்யவும்.
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கட்டணத்தை செலுத்தவும்.
- அதன் பிறகு உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்
இதனிடையே திருப்பதியில் கோவிட் -19 வழிகாட்டுதல்களுடன் தரிசனம் நடைபெறுகிறது.. மேலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு செல்பவர்களுக்கு மட்டுமே திருப்பதி கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்..
இந்த சான்றிதழ் தரிசனம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளைக்கு 30,000க்கும் குறைவான பக்தர்கள் திருப்பதிக்கு செல்கின்றனர். கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு, திரு